காவிரி நடுவர் மன்ற மேல்முறையீட்டை உச்சநீதிமன்றம் விசாரிக்கலாமா என்ற வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
காவிரி நடுவர் மன்றம் கடந்த 2007ம் ஆண்டில் வெளியிட்ட தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடக உள்பட 4 மாநிலங்கள் மேல் முறையீடு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்த தீர்ப்பில் விளக்கம்கோரி தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி அரசுகளும் மனுக்கள் தாக்கல் செய்தன.
இந்த அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவ ராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது
அப்போது இந்த மனுக்களை விசாரிப்பதற்கான முகாந்திரம் உள்ளதா? என விவாதிக்கப்பட்டது. அதில், அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கான முகாந்திரம் குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்நிலையில் இந்த மேல் முறையீடு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்கலாமா என்ற மனுவில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
