Asianet News TamilAsianet News Tamil

அயோக்கியர்கள் எல்லாம் அறங்காவலர்களா..? கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது எனக்கோரி வழக்கு…!

அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள 14 பேருக்கு குற்றப் பினண்ணி உள்ளது. 4 பேர் அரசியல் காரணங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது மனுதாரரின் குற்றச்சாட்டு.

Case against tirpati temple trust board members
Author
Amaravati, First Published Oct 6, 2021, 8:51 PM IST

அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள 14 பேருக்கு குற்றப் பினண்ணி உள்ளது. 4 பேர் அரசியல் காரணங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது மனுதாரரின் குற்றச்சாட்டு.

உலகம் முழுவதும் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தனத்திற்கு  புதிதாக 28 அறங்காவலர்களை நியமித்து கடந்த மாதம் ஆந்திரப்பிரதேச அரசு அரசாணை வெளியிட்டது. இதில் கடந்த ஆட்சியில் வருமான வரித்துறை சோதனைக்கு உள்ளாகி கட்டுக்கட்டாக பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சேகர் ரெட்டியும் இடம்பெற்றிருந்தார். இந்தநிலையில் அறங்காவலர்கள் நியமனத்தை எதிர்த்து அமராவதியில் உள்ள உயர்நீமனத்தில் வழக்கறிஞர் அஸ்வினி குமார் என்பவர் மனுத்தாக்கல் செய்தார்.

Case against tirpati temple trust board members

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளவர்களில் 14 பேர் மீது குற்றப் பின்னணி உள்ளது, 4 பேர் அரசியல் காரணங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே அவர்கள் 18 பேரையும் வழக்கில் எதிர் மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

மனுதாரர் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 18 பேரையும் எதிர் மனுதாரர்களாக அங்கீகரித்து அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இதற்கு தேவஸ்தானம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தேவஸ்தானத்திற்கும் இதற்கும் தொடர்பு கிடையாது அவர்கள் 18 பேருக்கும் இதில் எதிர்ப்பு இருந்தால் அவர்கள் தனியாக நீதிமன்றத்தை நாடலாம் என்று கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios