Asianet News TamilAsianet News Tamil

‘பிரதமர் மோடியின் அடுத்த அதிரடி’ – சொத்து விவரங்களை இணைக்கும் கார்டு...!!! பினாமிகள் ஜாக்கிரதை..!!!

card for-properties
Author
First Published Nov 28, 2016, 11:33 AM IST


கள்ளப்பபணம் மற்றும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் கடந்த 8ம் தேதி முதல் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இதனால் பொதுமக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டனர். பண பரிவர்த்தனை குறைந்து சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் புழக்கத்தில் இருந்த பழைய 500, 1000 ரூபாய்கள் 80 சதவிகிதத்திற்கும் மேல் திரும்ப பெற்றுள்ளது. இதனால் ஏற்பட்ட விளைவுகள் இன்னும் பல வாரங்கள் நீடிக்கும்.

இதனால் சிறு, குறு வியாரிகள் பாதிக்க்பட்டுள்ளனர். விவசாயிகளும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டு குறைந்த அளவு பணத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைதொடர்ந்து திருப்பூர், சூரத் போன்ற டெக்ஸ்டைல்ஸ் நகங்களிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது.

card for-properties

இதனிடையே, கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்து வரும் நிலையில், அடுத்ததாக ரியல் எஸ்டேட் தொழில் புரிபவர்களுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதாவது, பொதுமக்கள் தாங்கள் வாங்கும் சொத்துக்கள் மற்றும் விற்கும் சொத்துக்கள் என எல்லா விவரங்களையும்  “Property Passbook” என்ற கார்டுடன் இணைத்து தங்களது விவரங்களை இதில் பதிய வேண்டும்.

இதன் மூலம் கருப்பு பணம் மூலம் எந்த சொத்துக்களையும் வாங்கவோ, விற்கவோ முடியாது.

கருப்பு பண முதலைகள் தங்களது சொத்துக்களை பினாமிகள் பெயரில் வாங்கினால் அதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு அவர்கள் தள்ளப்டுவதால் மற்றவர்களின் சொத்துக்களை யாரும் தங்கள் பெயரில் பதியவேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை டெல்லியில் அமலில் வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios