ஜிஎஸ்டி வரியால் ஏற்கனவே அதிக விலையில் விற்கப்படும் கார்களின் விலை மீண்டும் உயர உள்ளது. அதன்படி, 15%  முதல்  25%  வரை உயர்த்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதாவது 4 மீ  நீளத்திற்கு அதிகமாகவும், 1.5 லிட்டருக்கு அதிகமான எஞ்சின் கொண்ட கார்களுக்கும் இந்த வரி விதிப்பு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விலை உயர்வு அடுத்த மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த கார் எந்த விலைக்கு உயரப்போகிறது தெரியுமா ?

ஹூண்டாய் நிறுவனத்தின் கிரிடா கார்கள் –ரூ.8.92 லட்சத்திற்கு விற்ற கார்கள்  14 லட்சம் வரை  விற்கப்பட உள்ளது

காம்பஸ் கார்கள் – ரூ.14.95  லட்சத்திற்கு விற்ற கார்கள் ரூ.20.65 லட்சம்  வரை உயரும்

மகிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ கார்கள் ரூ.9.31 லட்சத்திலிருந்து ரூ.15.34 லட்சம் வரை விலை  உயர உள்ளது.

இன்னோவா கார் 13.31 லட்சமாக இருக்கிறது. அடுத்த மாதம்  20.78 லட்சத்திற்கு விற்கப்பட உள்ளது

மேலும் இதுபோன்ற பல  கார்களின் விலை அடுத்த மாதம் முதல் உயர உள்ளது   என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே  கார் வாங்க விரும்புபவர்கள்  இந்த மாதத்திலே முன்பதிவு செய்துக் கொள்வது நல்லது