Asianet News TamilAsianet News Tamil

குடிபோதையில் ஓவர் ஸ்பீடாக காரை ஓட்டி பத்திரிகையாளரை கொன்ற ஐஏஎஸ் அதிகாரி..!

திருவனந்தபுரத்தில் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Car Driven Allegedly By IAS Officer...Kerala Journalist Killed
Author
Kerala, First Published Aug 3, 2019, 4:22 PM IST

திருவனந்தபுரத்தில் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பத்திரிகையாளர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். Car Driven Allegedly By IAS Officer...Kerala Journalist Killed

திருவனந்தபுரத்தில் மலையாள நாளிதழ் ஒன்றின் திருவனந்தபுரம் செய்தியாளராக பணியாற்றியவர் கே.எம்.பஷீர் (35). மலப்புரத்தைச் சேர்ந்த இவருக்கு கல்யாணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், பஷீர் அங்குள்ள மியூசியம் சாலையில் இன்று அதிகாலை இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, எதிர் திசையில் அதிவேகமாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பஷீர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். Car Driven Allegedly By IAS Officer...Kerala Journalist Killed

இந்த விபத்தை ஏற்படுத்திய காரில் ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ரமன் குடிபோதையில் இருந்துள்ளார். அவருடன் பெண் தோழியும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குடிபோதையில் காயமடைந்த ஐஏஎஸ் அதிகாரியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், பஷீர் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். Car Driven Allegedly By IAS Officer...Kerala Journalist Killed

இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காரை நான் ஓட்டவில்லை. எனது தோழிதான் ஓட்டினாள் என்று ஐஏஎஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கட்ரமன் கூறியுள்ளார். ஆனால், நேரில் பார்த்தவர்கள் ஸ்ரீராம்தான் காரை வேகமாக ஓட்டி வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios