உத்தரகாண்டில் அமைச்சரின் மகனின் காரும் - லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உத்தரகாண்டில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அமைச்சர் அரவிந்த் பாண்டேவின் மகன் அங்குர் பாண்டே இன்று அதிகாலை 3 மணியளவில் உத்தரப்பிரதேசத்தின் பரேலியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக காரில் தனது நண்பர்களுடன் சென்றுக்கொண்டிருந்தார்.

 

அப்போது அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத விதமாக காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் அமைச்சரின மகன் அங்கூர் பாண்டே உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த ஒருவரை ஆம்புலன்ஸ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.