ஆந்திர மாநிலத்தின் அனந்தபுரம் மாவட்டம் உருவகொண்டா அருகே வேகமாக இன்னோவா கார் வந்துக்கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கார் மீது லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
ஆந்திராவில் இன்னோவா கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலத்தின் அனந்தபுரம் மாவட்டம் உருவகொண்டா அருகே வேகமாக இன்னோவா கார் வந்துக்கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கார் மீது லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், ஒருவர் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்து உயிருக்கு போரடியவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த 9 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடி லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். திருமணத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
