திருடனை திருடன் என்று அழைப்பது நாட்டில் குற்றமாகிவிட்டது... மோடி அரசை இறங்கி அடிக்கும் உத்தவ் தாக்கரே..!
குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8(3)ன் படி அவரை எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
திருடர்களும், கொள்ளையர்களும் சுதந்திரமாக உள்ள நிலையில் ராகுல் காந்தி தண்டிக்கப்பட்டுள்ளார் என மகாராஷ்ராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது கர்நாடகாவின் கோலார் பகுதியில் 2019ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ஏன் அனைத்து திருடர்களும் மோடி என்ற குடும்பப் பெயரையே கொண்டுள்ளனர். நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்? என்று விமர்சித்திருந்தார்.
இதையும் படிங்க;- அதிகார வெறி கொண்ட சர்வாதிகாரியின் முன் காந்தி குடும்பம் தலைகுனியாது... பிரியங்கா காந்தி ஆவேசம்!!
இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, குற்றவியல் வழக்கில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8(3)ன் படி அவரை எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க;- ராகுல்காந்தி தகுதிநீக்கம்... வயநாடு தொகுதி காலியானதாக மக்களவை செயலகம் அறிவிப்பு!!
இதுகுறித்து மகாராஷ்ராவின் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறுகையில்;-ராகுல் காந்தியின் வேட்புமனு ரத்து செய்யப்பட்டது. திருடனைத் திருடன் என்று அழைப்பது குற்றமாகிவிட்டது. திருடர்களும், கொள்ளையர்களும் சுதந்திரமாக உள்ள நிலையில் ராகுல் காந்தி தண்டிக்கப்பட்டுள்ளார். ராகுல் காந்தி தகுதி நீக்கம் நாட்டில் சர்வாதிகாரம் முடிவதற்கான தொடக்கப் புள்ளி இது. அனைத்து அரசு அமைப்புகளும் அழுத்தத்தில் உள்ளன. இது ஜனநாயகத்தின் நேரடி படுகொலை. இதை எதிர்த்து போராடுவது மட்டுமே நல்ல முடிவை கொடுக்கும் என உத்தவ் தாக்கரே காட்டமாக தெரிவித்துள்ளார்.