யார் மீது நாம் அதிக அன்பு வைக்கிறோமே... அவர்கள் மீது தான் அதிக கோபத்தையும் வெளிப்படுத்துவோம் இது பல சமயங்களில் உண்மையாக தான் இருக்கிறது. 

ஆனால் சில சமயங்களில் சம்பந்தமே இல்லாமல், நம் அன்பிற்கு உரியவரிடம், கோவத்தை வெளிப்படுத்தி அவருடைய கோவத்திற்கு ஆளாகி விடுகிறோம். இப்படி காட்டப்படும் கோவங்கள் மனதை விட்டு நீங்க பல மாதங்கள் கூட எடுத்துக் கொள்கிறது. அதிலும் பெண் தோழியிடமோ... அல்லது காதலியிடமோ கோவத்தை காட்டிவிட்டால் எளிதில் அவர்கள் சமரசம் ஆவதில்லை.

இப்படி ஏதோ ஒரு பிரச்சனையின் மூலம் மகாராஷ்டாரவை சேர்ந்த இளம் தொழிலதிபர் நிலேஷ் கெடேகர் (25) அவருடைய காதலியிடம் சண்டை போட்டுள்ளார். இவர் மீது தவறு இருக்கவே தன்னுடைய காதலியிடம் மன்னிப்பு கேட்க பல முறை முயற்சி செய்துள்ளார். ஆனால் அவர் மும்பையில் இருந்ததால் மன்னிப்பு கேட்க முடியவில்லை.

இதனால் தன்னுடைய நண்பர் விலாஸ் என்பவர் கொடுத்த ஐடியாவின் படி, சினிமா பாணியில் சாலையில் நடுவே... தன் காதலியின் பெயரை எழுதி, அதில் சிறப்பு நிறத்தில் இதயம் வரைந்து தன்னை மன்னித்து விடும்படி 300 பேனர்கள் வைத்தார். காரணம் தன்னுடைய காதலி மும்பை விமான நிலையத்தில் இருந்து வரும் வழியில் உள்ள ஒரு பேனரையாவது பார்த்து தன்னுடைய மன்னிப்பை ஏற்றுக்கொள்வார் என்று நினைப்பில் தான்.

ஆனால் இதுவே இவருக்கு சிக்கலாகவும் மாறியுள்ளது. திடீர் என ரோடு முழுவதும் உள்ள இந்த பேனர்களை பார்த்த போலீசார் ஷிண்டேவை பிடித்து விசாரித்தனர், பின் நிலேஷை பிடித்து சட்டவிரோத  முறையில் பேனர் வைத்ததற்காகவும் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதாகவும் கூறி இவர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக கூறியுள்ளனர்-.

தன்னுடைய காதலியை எப்படியும் சமாதனம் செய்து விட வேண்டும் என்று நினைத்த ஷிண்டேவிற்கு, இந்த வித்தியாசமான முயற்சியே வில்லனாக மாறி, சர்ச்சையில் சிக்கவைதுள்ளது. இவரின் எவ்வளவு முயற்சி செய்தும் அது இவருக்கே எதிராக மாறியது சோகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.