உத்தரபிரதேசத்தில் 15 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 29 சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து டெல்லிக்கு 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு சொகுசு பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, யமுனா அதிவிரைவு சாலையில் காலை 5 மணிக்கு வேகமாக வந்துக்கொண்டிருந்த போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர், நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு 15 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

இந்த விபத்தில் 29 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலரும் தூக்கத்தில் மூழ்கிய படி இறந்தனர். மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வேகமாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகக் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

பேருந்து விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத், தனது வருத்தத்தையும் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும் இரங்கலையும் தெரிவித்துள்ளார். மேலும் பலியானோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் நிவாரணமாக அறிவித்துள்ளார்.