டெல்லியில் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த சப்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்த சப்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சத்யநிகேதன் பகுதியில் இன்று ஒரு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இதுக்குறித்து தகவலறிந்த டெல்லி தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறனர். இந்த இடிபாடுகளுக்குள் மக்கள் பலர் சிக்கியிருக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது. சின்டெல்ஸ் பாரடிசோவின் 18 மாடி டவர் D இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

விபத்து நடந்தபோது, அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளரால் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுக்குறித்து பேசிய டெல்லி தீயணைப்பு துறை அதிகாரி அதுல்கார்க், சத்ய நிகேதன் கட்டிடம் எண் 173 இல் வீடு இடிந்து விழுந்தது பற்றி மதியம் 1:24 மணியளவில் எங்களுக்கு அழைப்பு வந்தது. ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. 5 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர், அவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
