மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் 2 வது வீடு வாங்குபவர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது மத்திய அரசு.

மத்திய இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த மந்திரி பியூஷ் கோயல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் வீட்டு வாடகையிலிருந்து வரும் வருமானத்திற்கு வரிச்சலுகை ரூ.1.8 லட்சத்திலிருந்து ரூ.2.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. வரிச்சலுகை மூலம் நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள். கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையால் கணக்கில் வராத ரூ.1.30 லட்சம் கோடி கண்டறியப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. மூலம் நுகர்வோருக்கு ரூ.80,000 கோடி வரிச்சுமை குறைந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 5 லட்சம் கோடி பொருளாதாரமாக இந்தியா உருவாகும். தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2022-க்குள் விண்வெளியில் இந்தியா தடம் பதிக்கும். வீட்டுக்கடனுக்கான வட்டிச் சலுகை, இனி 2 வீடுகளுக்கு வழங்கப்படும். 2-வது வீடு வாங்குபவர்களுக்கும் வரிச்சலுகை அளிக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதுவரை ஒரு வீடு வாங்கினால் மட்டுமே வரிச்சலுகை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 2 வது வீடு வாங்கினாலும் வரிச்சலுகை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.