திமுக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது 300 பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக சன் நெட் ஒர்க்சுக்கு பயன்படுத்தியதாகவும் இதனால் அரசுக்கு 1கோடியே 75 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் நடத்தி வந்ததாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இது தொடர்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரண நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பிஎஸ்என்எல் முறைகேடு தொடர்பாக தயாநிதி மாறன் மீது சிபிஐ இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஏற்கனவே தயாநிதி மாறனுக்கு எதிராக ஏர்செல் மேக்சிஸ் வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் பிஎஸ்என்எல் வழக்கில் தயாநிதிமாறன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.