ஒன்பது செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி- 48 ரக ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்பட உள்ளது .  இஸ்ரோ மூலம் அனுப்பப்படும் 50ஆவது பிஎஸ்எல்வி ராக்கெட் இது என்பதால் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடைபெற உள்ளதாக இஸ்ரோ சிவன்  பெருமிதம் தெரிவித்துள்ளார் .  நாட்டின் பாதுகாப்பு இயற்கை வளங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட ஆய்வுகளுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பிஎஸ்எல்வி ரக  ராக்கெட்கள் உதவியுடன் செயற்கைக்கோள்களை விண்ணில் நிலை நிறுத்தி வருகிறது . 

 பூமியை கண்காணிக்கவும் ராணுவ பாதுகாப்புக்கு உதவும் வகையிலும் ரி சாட்- 2  பி ஆர் -1  செயற்கைக்கோளை தாங்கியபடி பிஎஸ்எல்வி 48 ராக்கெட் இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது . ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து  பிற்பகல் 3. 25 மணிக்கு செயற்கைக்கோள்கள்   விண்ணில் ஏவப்பட உள்ளது .  சுமார் 628 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள்களுடன்  அமெரிக்காவில் 6 செயற்கைக்கோள்கள் ,  இஸ்ரேல் ,  ஜப்பான் ,  இத்தாலி ,  ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைகோளும் வணிக ரீதியாக இந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளன. 

 ரிசாட்- 2 பிஆர்-1 செயற்கைகோள்கள் 5 ஆண்டுகள் பூமியை கண்காணிக்கும்,  என இஸ்ரோ  விண்வெளிஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது .  இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா அசுர வளர்ச்சி கண்டு வருகிறது .  அந்த வரிசையில் பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் மூலம் புதிய மைல்கல்லை எட்டி உள்ளது என தெரிவித்துள்ளார்.