தற்போது பிரிட்டானியா நிறுவனமும் இணைந்து கொண்டு பொது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.
இந்தியாவில் பலரின் காலை டிபன் என்னவென்று கேட்டால் பலர் கூறும் ஒற்றை பதில் டி-பிஸ்கட் தான். வீட்டை விட்டு வெளியேறி வேறு நகரங்களில் வசிக்கும் பேச்சிலர்களின் டிபன் தேர்வாகவும் டி பிஸ்கட் காம்பினேஷன் கட்டாயம் இருக்கும். இந்த நிலையில், இந்தியாவில் பிஸ்கட் விலையும் கூடிய விரைவில் ஏற போகிறது.
விலை உயர்வு:
நாட்டின் முன்னணி பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா தனது பிஸ்கட் மற்றும் குக்கிஸ் பொருட்கள் விலையை அதிகபட்சமாக ஏழு சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டு இருக்கிறது. 130 ஆண்டுகள் பாரம்பிரயம் மிக்க நிறுவனமான பிரிட்டானியா டிசம்பர் மாதம் வரை நிறைவுற்ற காலாண்டில் மட்டும் 19 சதவீத வருவாயை இழந்துள்ளது.
கடந்த இரு ஆண்டுகளாக வியாபாரம் மிகவும் மோசமாகவே இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், திடீரென ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே ஏற்பட்டு இருக்கும் போர் சூழல் காரணமாக உணவு வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது என பிரிட்டானியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் வருன் பெர்ரி தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
பால், காஃபி பவுடர், மேகி, டீ என பல பொருட்களின் விலை மார்ச் மாத வாக்கில் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் தான் பிரிட்டானியா நிறுவனம் தனது பொருட்களுக்கு விலை உயர்வை அறிவித்து இருக்கிறது. முன்னதாக பல நிறுவனங்கள் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது பிரிட்டானியா நிறுவனமும் இணைந்து கொண்டு பொது மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறது.

மிக மோசம்:
"இந்த ஆண்டு விலை உயர்வு 3 சதவீதம் வரை ஏற்படும் என்றே முதலில் கணித்து இருந்தோம், எனினும் இவை அனைத்தையும் மிஸ்டர் புதின் செய்த செயல் காரணமாக முற்றிலும் தவறாகி விட்டது. தற்போது விலை உயர்வு 8 முதல் 9 சதவீதம் வரை ஏற்படும் என தெரிகிறது. இவ்வளவு மோசமான இரு ஆண்டுகளை இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை," என பிரிட்டானியா நிறுவன நிர்வாக இயக்குனர் வருன் பெர்ரி தெரிவித்தார்.
தனது பொருட்களுக்காக வாங்கும் அனைத்து விதமான மூலப் பொருட்களின் விலையும் கணிசமான அதிகரித்து விட்டது. அந்த வகையில், தற்போது பிரிட்டானியா நிறுவனமும் தனது பொருட்களின் விலையை இந்த ஆண்டு உயர்த்தப் போவதாக அறிவித்து இருக்கிறது.
"வாடிக்கையாளர்களுக்கு இது மிகப்பெரும் அதிர்ச்சியாகவே இருக்கும். விலை உயர்வை சமாளிக்க பாக்கெட்களில் சில கிராம்களில் சமரசம் செய்யலாம். ஆனால் வாடிக்கையாளர்கள் பாக்கெட்களின் எடை குறைவதை மிக எளிதில் கண்டுபிடித்துவிடுவர். இது வியாபாரத்தை பாதிக்கும். கடந்த ஆண்டு விலை உயர்விலேயே வியாபாரம் பாதிக்கப்படுவதை கண் கூடாக பார்த்துவிட்டோம்," என அவர் மேலும் தெரிவித்தார்.
