Asianet News TamilAsianet News Tamil

கொரோனா பாதிக்கப்பட்ட மணமகன் மரணம்... திருமணத்தில் பங்கேற்ற 100 பேர் பாதிப்பு... அலறும் உறவினர்கள்..!

கொரோனா பாதிக்கப்பட்டவரின் திருமணத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
 

Bride of Corona Victim's death ... 100 people affected by marriage ... screaming relatives
Author
mumbai, First Published Jul 1, 2020, 10:27 AM IST

கொரோனா பாதிக்கப்பட்டவரின் திருமணத்தில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

பீகார் மாநிலம்,பாட்னா அருகே பாலிகஞ்ச் பகுதியை சேர்ந்த 30 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவருக்கு கடந்த 15-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த இரண்டு நாட்களில் புது மாப்பிள்ளை திடீரென்று மரணமடைந்தார். கொரோனா பரிசோதனை நடத்தப்படாமலேயே இறந்த மாப்பிள்ளையின் உடல் தகனம் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களது நெருங்கிய உறவினர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில், கொரோனா பாதிப்பு உறுதியானதாக பாட்னா மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Bride of Corona Victim's death ... 100 people affected by marriage ... screaming relatives

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சோதனையை மேற்கொண்டதில், 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பீகாரில் முதன்முறையாக கொரோனா தொற்று அதிகம் பேருக்கு பரவிய முதல் நிகழ்வு இது. மணமகனின் குடும்பத்தினர் அதிகாரிகளுக்கு உரிய தகவல் அளிக்காமல் தகனம் செய்துவிட்டதால், மணமகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாரா என்பதை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் சாப்ட்வேர் இன்ஜினியர்  தீபாலி திருமணத்திற்காக தனது சொந்த  கிராமத்திற்கு வந்துள்ளார்.Bride of Corona Victim's death ... 100 people affected by marriage ... screaming relatives

அப்போது, அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்துள்ளது. ஆனால் குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர். திருமணம் முடிந்த 2 நாட்களுக்கு பிறகு, மணமகனின் உடல்நிலை மோசமடையவே, பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

இளைஞர் உயிரிழந்த விவகாரத்தை அறிந்த மாவட்ட அதிகாரிகள், திருமண நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அதில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மணப்பெண்ணுக்கு கொரோனா இல்லையென முடிவுகள் வந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios