சண்டைபோட்டுவிட்டு சென்ற காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலன் மன்னிப்பு கேட்டுள்ளார். புனேவில் சண்டை போட்டுவிட்டு சென்ற காதலியிடம் மன்னிப்பு கேட்டு 300 இடங்களில் பேனர் வைத்த காதலன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வசிப்பவர் நிலேஷ் கேடேகர் (25). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அவர்களுக்கு இடையே சிறிய சண்டை ஏற்பட்டுள்ளது. ஆகையால் கொஞ்சனால் பேசமால் இருந்து வந்துள்ளார். அந்த பெண் மும்பை சென்றுவிட்டார். இந்நிலையில் அவரது காதலி மீண்டும் புனே வருவதாக நிலேஷிற்கு தகவல் கிடைத்தது.

தனது காதலி வரும்போது அவரை கவரும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். இது தொடர்பாக தனது நண்பரிடம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு அப்பெண் ரயிலில் இருந்து இறங்கி வீடு செல்லும் சாலை வழியில் மற்றும் அப்பெண் செல்லும் இடத்தில் இருதயம் வரைந்து மன்னித்துக்கொள் சிவ்டே என்று தன் காதலியின் பெயரையும் பேனரில் போட்டு முக்கிய இடங்களில் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

 

ஒரே இரவில் அனைத்து இடங்களிலும் பேனர் வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மாநகராட்சி நிர்வாகத்தை உஷார்படுத்தினர். அனுமதி இல்லாமல் பேனர்களை வைத்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீசார் மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுகொண்டனர். இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு போலீசார் அதிரடி விசாரணை நடத்தினர். அவர் யார் என்று விசாரித்த போது தொழிலதிபர் மகன் என்று தெரியவந்தது. பிறகு அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.