பாஜகவினரின் குழுவைக் கண்டதும், ராகுல் காந்தி அவர்களுடன் உரையாடுவதற்காக தனது கான்வாய் வாகனத்தை நிறுத்தினார். ராகுல் காந்தி தங்களிடம் வந்ததும் பாஜக தொண்டர்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று முழக்கமிட்டனர். ராகுல் காந்தி அவர்களுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாப்பூர் நகரில் செவ்வாயன்று ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் பாஜக தொண்டர்கள் புகுந்து "மோடி-மோடி" என்று கோஷம் போட்டு கூச்சலிட்டனர்.

பா.ஜ.க.வினர் முழக்கமிட்டதை அடுத்து ராகுல் காந்தி தனது ஊர்வலத்தை நிறுத்திவிட்டு, அவர்களை நோக்கி முத்தத்தைப் பறக்க விட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை சனிக்கிழமை பாஜக ஆளும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நுழைந்தது. அப்போது முகேஷ் துபே தலைமையில் பாஜக ஆதரவாளர்கள் பேரணியை எதிர்கொண்டனர்.

வெறும் 20 ரூபாய்க்கு 20 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ்! மத்திய அரசு வழங்கும் காப்பீட்டை மிஸ் பண்ணாதீங்க!

Scroll to load tweet…

பாஜகவினரின் குழுவைக் கண்டதும், ராகுல் காந்தி அவர்களுடன் உரையாடுவதற்காக தனது கான்வாய் வாகனத்தை நிறுத்தினார். ராகுல் காந்தி தங்களிடம் வந்ததும் பாஜக தொண்டர்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று முழக்கமிட்டனர். ராகுல் காந்தி அவர்களுடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

சுருக்கமாக சிறிது நேரம் அவர்களுடன் பேசிய ராகுல் காந்தி மீண்டும் தனது பயணத்தைத் தொடர்ந்தார். இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்த பாஜக நிர்வாகி முகேஷ் துபே, முழக்கங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக ராகுல் காந்தி தங்களை நோக்கிக் சைகை செய்தார் என்றார். அவருக்கு உருளைக்கிழங்குகளை வழங்கி, "நீங்கள் வரவேற்கப்படுகிறீர்கள் என்று நான் சொன்னேன்" என்றும் அவர் கூறினார்.

கடந்த 2017ஆம் ஆண்டு ராகுல் காந்தி உருளைக்கிழங்கை தங்கமாக மாற்றும் மிஷன் பற்றி பேசினார் என்ற வதந்தி கிளப்பிவிடப்பட்டது. பாஜகவினாரல் பரப்பப்பட்ட வீடியோ சில வினாடிகள் மட்டுமே இருந்தது. ஆனால், முழு வீடியோவில் ராகுல் பிரதமர் மோடிதான் அவ்வாறு வாக்குறுதி அளித்தார் என்று Factcheck தளங்கள் தெளிவுபடுத்தின.

எலக்ட்ரானிக் கழிவுகளைத் தங்கமாக மாற்றலாம்! புதிய வழியைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!