அப்படிப்போடு..! நாளை பட்ஜெட் தாக்கலில் பாஜகவின் அதிரடி பிளான் இதுதானாம்..! 
 
நாடாளுமன்றத்தில் நாளை இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதி மந்திரி பியூஷ் கோயல். வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைப்பெற உள்ள லோக்சபா தேர்தல் ஒருபுறமிக்க மத்தியில் ஆளும் பாஜகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சி காலத்தில் கடைசியாக தாக்கல் செய்ய உள்ள இடைக்கால பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்ஜெட் தாக்கல், இந்த ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கலாக இருக்கும் என்ற செய்தி வைரலாக பரவியது. ஆனால் இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் முழு பட்ஜெட் தாக்கல் செய்தால் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் காங்கிரஸ் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த நிதி அமைச்சர் பியூஸ் கோயல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட் 2019 - 2020 ஆண்டுக்கான ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தான் என்று தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில் நாளை நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற வேண்டும் என மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் நேற்று அனைத்து கட்சி கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது ஒரு பக்கமிருக்க நாளை நடைபெற உள்ள கூட்டத்தொடரில் பல்வேறு முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவேதான் கூட்டத்தொடரை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சிகளை சபாநாயகர் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது

நாளை நடைபெற உள்ள இடைக்கால பட்ஜெட் தாக்கல் முழு பட்ஜெட் தாக்கல் போன்று இல்லாவிட்டாலும், சில முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக வெளியான தகவலையடுத்து இதில் எந்தெந்த திட்டங்கள் இடம் பெற்றிருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.