Asianet News TamilAsianet News Tamil

வெறும் 16 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பாஜக! ஜெயநகர் தொகுதியில் த்ரில் முடிவு!

ஜெயநகரில் உள்ள எஸ்எஸ்எம்ஆர்வி கல்லூரியில் உள்ள வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள் சனிக்கிழமை பின்னிரவில்தான் முடிவை அறிவித்தனர்.

BJP's 16-Vote Victory In Karnataka Seat After Late-Night Counting Drama
Author
First Published May 14, 2023, 12:01 PM IST

கர்நாடகாவின் ஜெயநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சி.கே ராமமூர்த்தி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சௌமியா ரெட்டியை வெறும் 16 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

இது குறித்து மாநில தகவல் துறை அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயநகரில் உள்ள எஸ்எஸ்எம்ஆர்வி கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள் இன்று மாலை முடிவை அறிவித்ததாகக் கூறியுள்ளார். வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால், வாக்குகளை மீண்டும் எண்ணும்படி ராமமூர்த்தி கோரினார்.

ராமமூர்த்தி 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரிகள் அறிவித்தனர். பாஜகவின் சி.கே. ராமமூர்த்தி 57797 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி 57781 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

கர்நாடக முதல்வர் யார்? கடினமான முடிவுவை எடுக்கும் பொறுப்பு கார்கே கையில்!

BJP's 16-Vote Victory In Karnataka Seat After Late-Night Counting Drama

இதனால், வாக்கு இயந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக சந்தேகத்தைக் கிளம்பி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே. சிவகுமார் தலைமையில் ஜெயநகரில் உள்ள ஆர்வி இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் வளாகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டியின் தந்தை ராமலிங்க ரெட்டி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு கண்டனம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

பாஜகவின் தேஜஸ்வி சூர்யா மற்றும் ஆர். அசோக் ஆகியோர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டதாக சிவக்குமார் குற்றம் சாட்டினார்.

கடந்த மே 9ஆம் தேதி ஜெயநகர் தொகுதியில் தேர்தலை முறைகேடுகள் இல்லாமல் நடத்துவது குறித்து காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது நினைவூட்டத்தக்கது. அதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்க ரெட்டி, "ஜெயநகரில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடப்பதை உறுதி செய்ய தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம்." என்றார்.

ஜெகதீஷ் ஷெட்டர் முதல் லக்ஷ்மண் சாவடி வரை.. தேர்தலுக்கு முன் பாஜகவில் இருந்து விலகிய தலைவர்களின் நிலை என்ன?

BJP's 16-Vote Victory In Karnataka Seat After Late-Night Counting Drama

"இரண்டு மூன்று நாட்களாக அனைத்து கெட்ட அம்சங்களும் ஜெயநகருக்கு வந்துள்ளன. பாஜக வேட்பாளர் சி.கே. ராமமூர்த்தி தொகுதியில் வசிக்கும் ஏழை மக்களை மிரட்டி வருகிறார். பெங்களூருவின் 50% ரவுடிகள் ஜெயநகர் பகுதியில்தான் உள்ளனர்" என்றும் ராமலிங்க ரெட்டி குறிப்பிட்டிருந்தார்.

சனிக்கிழமை நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்படி கனகபுரா தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர் நாகராஜுவை 1,22,392 வாக்குகள் வித்தியாசத்தில் டிகே சிவகுமார் தோற்கடித்தார்.

தேர்தல் ஆணையமும் இதனை உறுதி செய்துள்ளது. 224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 66 இடங்களிலும், ஜேடி(எஸ்) 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் 43% வாக்குகளை வசப்படுத்திய காங்கிரஸ்! பரிதாப நிலையில் ஜேடிஎஸ்!

Follow Us:
Download App:
  • android
  • ios