6 வருடத்தில் ரூ.6,564! சட்டவிரோதமான தேர்தல் பத்திரங்கள் மூலம் கோடி கோடியாகக் குவித்த பாஜக!
2018ஆம் ஆண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தேர்தல் பத்திரங்களின் அதிக லாபம் பெற்ற கட்சியாக பாஜக இருந்து வருகிறது.
தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுவரை வழங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறியுள்ள தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக ஆதாயம் அடைந்திருப்பது பாஜக தான்.
ஜனவரி 2 முதல் ஜனவரி 11 வரை நடந்த சமீபத்திய தேர்தல் பத்திர விற்பனையில் 570 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் மூலம் தெரியவந்துள்ளது.
அடுத்த கட்ட தேர்தல் பத்திர விற்பனை பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் நடக்க இருந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள உச்ச நீதிமன்றம் உடனடியாக தேர்தல் பத்திர விற்பனையை நிறுத்தவும் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு; ஸ்டேட் வங்கிக்கும் முக்கிய உத்தரவு!
தேர்தல் பத்திரத் திட்டம் தொடங்கப்பட்ட உடனேயே சர்ச்சைக்குள்ளானது. யார் மூலம் அரசியல் கட்சிகள் பணம் பெறுகின்றன என்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரிந்துகொள்ள முடியாது என்பது விமர்சனத்துக்கு உள்ளானது. கறுப்புப் பணத்தை வெளுக்கவும், வருமான வரி ஏய்ப்புக்கும் வழிவகுக்கும் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில், இதுவரை கிடைத்துள்ள புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 2022 முதல் மார்ச் 2023 வரை ரூ.2,800 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன. இவற்றில் கிட்டத்தட்ட 46% அல்லது ரூ.1,294 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் பாரதிய ஜனதா கட்சிக்குச் சென்றுள்ளது.
2018ஆம் ஆண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தேர்தல் பத்திரங்களின் அதிக லாபம் பெற்ற கட்சியாக பாஜக இருந்து வருகிறது.
2018-2023 க்கு இடையில் விற்கப்பட்ட ரூ.12,008 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களில், பாஜக கிட்டத்தட்ட 55% அல்லது ரூ.6,564 கோடியைப் பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டில் ரூ.210 கோடி, 2019ஆம் ஆண்டு ரூ.1,450 கோடி, 2020ஆம் ஆண்டு ரூ.2,555 கோடி, 2021ஆம் ஆண்டு ரூ.22.38 கோடி, 2022ஆம் ஆண்டு ரூ.1,033 கோடி மற்றும் 2023ஆம் ஆண்டு ரூ.1,294 கோடி நிதியை பாஜக பெற்றுள்ளது.
2018 முதல் 2023 வரையான காலத்தில் ரூ.1,135 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்களில் இருந்து 9.5% தொகையை மட்டுமே காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது.
அமெரிக்க பங்களாவில் சடலமாகக் கிடந்த இந்திய வம்சாவளிக் குடும்பம்... நடந்தது என்ன?