ஓரினச்சேர்க்கையாளர்கள் ஐபிசி 377 சட்டத்தின்படி ஒன்று சேர்வதில் சட்டப்படி எந்த குற்றமும் இல்லை என உச்சநீதிமன்றம் அதிரடி  தீர்ப்பை சில நாட்களுக்கு முன்பு கூறியது. இதற்கு பல்வேறு தரப்பிலும் ஆதரவும் - எதிர்ப்பும் எழுந்துள்ளது. 

இந்த நிலையில், அமித் மால்வியா எனும் நபர், தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு சுவராசியமான கேள்வி எழுப்பினார். ஒரு பேச்சுக்காக  கேட்கிறேன், உங்களில் எத்தனைப்பேர், உங்களது வீடு அல்லது அப்பார்ட்மென்ட்டை ஓரினசேர்க்கையாளர்களுக்கு வாடகைக்கு  அளிப்பீர்கள் என கேள்வி கேட்டுவிட்டு, அப்படி அளிப்பவர்கள் உங்கள் கையைத் தூக்குங்கள் என்று சுவராசியமாக கேட்டிருந்தார்.

இந்த பதிவைப் பார்த்த பிரபல தொழிலதிபரும், பாஜகவின் மாநிலங்களவையின் எம்.பியுமான ராஜீவ் சந்திரசேகர், நான் என்  கைகளை உயர்த்துகிறேன் எனக் கூறியதோடு மட்டுமல்லாமல், பாலியல் விருப்பம், ஜாதி அல்லது மதம் ஆகியற்றை  பொருட்படுத்தாமல் உள்ள அனைவருக்கும் என ஆதரவு உண்டு என தெரிவித்துள்ளார். 

அவர்களுக்கு உதவி செய்ய என கரம் எப்போதும் உயரும் என குறிப்பிட்டுள்ளார். பிரைவசி என்பது ஒருவரின் அடிப்படை உரிமை  என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இளைஞர்கள் தங்களது சொந்த வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய அவர்களை அனுமதிக்க வேண்டும் என தாம் கருதுவதாக ராஜீவ் சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார்.  தற்போதைய அரசியலமைப்பு சுதந்திரம் மற்றும் தேர்வு செய்தற்கான அடிப்படை உரிமைமகளை உறுதி செய்கிறது என்றும் பாஜக எம்.பி. ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.