கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ண ஜெயந்தி விழாவில், உங்களை காதலிக்க மறுக்கும் பெண்ணை கடத்தி வந்து, உங்களுக்கேதிருமணம் செய்து வைக்கிறேன் என பாஜக எமஎல்ஏ ராம்கதம் பொதுமக்கள் மத்தியில் பேசினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவரது நாக்கை அறுத்து கொண்டு வருபவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என காங்கிரஸ் மூத்த அமைச்சர் அறிவித்தார். இதனால், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. 

இந்நிலையில், மும்பையை உயிருடன் இருக்கும் நடிகைக்கு டுவிட்டர் மூலம் இரங்கல் செய்தி வெளியிட்டு அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே புற்று நோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். 

ஆனால், ராம் கதம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “இந்தி மற்றும் மராத்தியில் புகழ்பெற்ற நடிகை சோனாலி பந்த்ரே அமெரிக்காவில் காலமானார். அவரது மரணத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். இதனால், அவர் மீண்டும் சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாகிறார்.