உள்ளாட்சி தேர்தலில் அதிகளவில் முஸ்லீம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதால்தான் தோல்வி அடைந்தோம் என்று பாஜக எம்.எல்.ஏ. பேசியுள்ளது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் அதிகளவில் முஸ்லீம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதால்தான் தோல்வி அடைந்தோம் என்று பாஜக எம்.எல்.ஏ. பேசியுள்ளது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தியதால் தோல்வி அடைந்ததாக அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கூறியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பாஜக ஆட்சி, மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
மத்திய பிரதேசத்தில் அண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. பல இடங்களில் பாஜக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.
இந்த நிலையில் அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. பகதூர் சிங் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இவர் மாஹித்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய எம்.எல்.ஏ. பகதூர் சிங், முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த 6 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. எனினும் அவர்கள் அனைவருமே தோல்வி அடைந்து விட்டனர். இது எங்களுக்கு மிகுந்த வேதனை அளித்தது என்று கூறினார். பகதூர் சிங் பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
