டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் தீன்தயாள் உபாத்யாய மார்க் சாலையில் பாஜக தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இதன் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் தொடர்புகொண்ட மர்மநபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். 

பின்னர் ரளி என கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டதில்  மைசூரிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாக தெரிவித்துள்ளனர்.

 

மேலும், இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல் துறையினர் கூறியுள்ளனர். பாஜக தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.