குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துவரும் நிலையில், மூழ்கும் காங்கிரஸ் எனும் கப்பலை ராகுல், சோனியாவால் காப்பாற்ற முடியாது என்று பா.ஜனதா கட்சி கிண்டல் செய்துள்ளது.

குஜாரத்தில் நடந்து வரும் அரசியல் குழப்பங்கள் குறித்து மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறுகையில், “ குஜராத்தில் எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரத்தின் மூலம் பா.ஜனதா இழுத்துவருகிறது என்ற காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு பொய்யானது மட்டுமல்ல, நகைப்புக்குரியது, விரக்தியின் உச்சத்தில் கூறும் வார்த்தைகள்.

இந்த குற்றச்சாட்டு என்பது காங்கிரஸ் கட்சியின் அரசியல் திவாலாகிவிட்டதை காட்டுகிறது. உண்மை என்னவென்றால், காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பல். இதை அதன் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர்ராகுல் காந்தி ஆகியோரால் காப்பாற்ற முடியாது.

காங்கிரஸ் கட்சி ஊழலை வளர்க்கும் மிகப்பெரிய கட்சி. இதனால்தாந் கட்சி ஆதரவாளர்ள், தொண்டர்கள் மத்தியில் ஆதரவை இழந்துள்ளது’’ எனத் தெரிவித்தார்.