bjp condumn aazam khan speech about military
காஷ்மீர், திரிபுரா ஆகிய மாநிலங்களில் அத்துமீறும் ராணுவ வீரர்களை பழிக்கு பழி வாங்கும் விதமாக பெண்கள் அவர்களை அடித்து நொறுக்குவதும், அவர்களின் அந்தரங்க உறுப்புகளை நறுக்குவதும போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த ஆஸம் கான் தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சியின் தேசிய பொதுச் செயலாளரும். முலாயம் சிங் யாதவிற்கு நெருக்கமானவருமான ஆஸம் கான், அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை சொல்லி சிக்கலில் மாட்டிக் கொள்வது வழக்கம்.
அவர் தற்போது ராணுவ வீரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய புதிய கருத்தை ஒன்றை சொல்லி சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் சமாஜ்வாதி கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பேசிய ஆஸம் கான், காஷ்மீர், திரிபுரா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களிடம் ராணுவ வீரர்கள் அத்துமீறி நடந்துகொள்வதாகவும், அதனால் பெண்கள் ராணுவ வீரர்களை அடிப்பதும், அவர்களின் அந்தரங்க உறுப்புகளை வெட்டுவதும் நடைபெற்று வருவதாக சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.
அஸம் கானின் இந்த கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சி அஸம் கானை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், தற்போது பேச்சு சுதந்திரம் இருப்பதாக கூறி பலரும் ராணுவத்தினர் குறித்து தரம் தாழ்ந்த கருத்துகளை தெரிவித்து வருவதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
