Asianet News TamilAsianet News Tamil

யாருக்கு கிடைக்க போகுதோ அந்த அண்டா பிரியாணி? இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

ஹைதராபாத்தில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வெள்ளநீரில் பிரியாணி அண்டா மிதக்கும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. 

biryani pots floating in waterlogged street on hydrabad goes viral
Author
Hyderabad, First Published Aug 3, 2022, 8:39 PM IST

ஹைதராபாத்தில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வெள்ளநீரில் பிரியாணி அண்டா மிதக்கும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் ஹைதராபாத்தில் தென்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. சிறிய மழை பெய்தாலும் இந்திய நகரங்களில் தண்ணீர் தேங்கிவிடும் என்ற சூழலில் ஹைதராபாத்தில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளம் நிறைந்த தெருக்களின் பல விரும்பத்தகாத பொருட்கள் மிதப்பதற்கு மத்தியில், ஒரு பிரியாணி அண்டா மிதக்கும் வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்துக்கு சீல் வைப்பு: அமலாக்கப்பிரிவு நடவடிக்கை

இரண்டு பிரியாணி அண்டாக்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டு, தண்ணீர் தேங்கிய தெருவில் மிதப்பதை அந்த வீடியோ காட்டுகிறது. பின்னணியில், அடிபா ஹோட்டல் என்ற பிரியாணி கடை ஒன்றை காணமுடிகிறது. அந்த உணவகத்தின் பிரியாணி அண்டாக்கள் தான் வெள்ளநீரில் மிதப்பதாக கூறப்படுகிறது. இதுக்குறித்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த பயணர், யாரோ ஒருவர் தனது பிரியாணி ஆர்டரைப் பெறாததற்காக கவலையடைய போகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ இதுவரை 1.1 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ள நிலையில் பலரும் இதுக்குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.டிவிட்டர் பயணர் ஒருவர், பிரியாணி கடை உரிமையாளர்கள், ஆட்டோ பைலட் பிரியாணி அண்டா மீது எலான் மஸ்கிற்கு ஆர்வம் உள்ளதா என்பது குறித்து ஆராய்ச்சி செய்வார்கள் என்று நம்புவதாக குறிப்பிடுள்ளார்.

இதையும் படிங்க: பாஜவில் இருந்து வந்தவருக்கு அமைச்சர் பதவி.. மம்தா பானர்ஜி போட்ட புது ஸ்கெட்ச் !!

நகைச்சுவையான வீடியோக்களுக்கு மத்தியில், சிலர் இந்தியாவின் நகரங்களில் உள்கட்டமைப்பின் மோசமான நிலையை சுட்டிக்காட்டினர். இதுக்குறித்து கருத்து தெரிவித்த ஒருவர், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள சாமானியர்களின் வாழ்க்கை முறை இதுதான். ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுக்காக பில்லியன்களை செலவழிக்கும் இரு நாடுகளும் தங்கள் மக்களுக்கு வசதியான மற்றும் ஒழுக்கமான உள்கட்டமைப்பைக் கொடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் பலரும் தங்களது கருத்துகளை டிவிட்டர் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios