இந்தியாவில், H5N8 என்ற வைரஸால் பரவும் புதியவகை பறவை காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி தேசிய உயிரியல் பூங்காவில், கடந்த 3 தினங்களில் மட்டும் 15 பறவைகள் உயிரிழந்துள்ளன. அவற்றின் உடல்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பறவை காய்ச்சலால் அவை உயிரிழந்ததை உறுதிபடுத்தி உள்ளனர்.

இந்நிலையில், H5N8 என்ற வைரஸால் பரவும் புதியவகை பறவை காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், பறவைகள் உயிரிழப்புக்‍கு இந்த H5N8 வைரஸ் தாக்‍குதலே காரணம் என கூறப்படுகிறது. இந்த பறவை காய்ச்சல் வைரஸ் பரவாமல் தடுக்‍க மாநில அரசுகளும், வனவிலங்குகள் சரணாலயங்களும் முன்னெச்சரிக்‍கை நடவடிக்‍கை எடுக்‍க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.