பீகாரில் உள்ள தனியார் பள்ளிகளில் 9-ம் வகுப்பு மாணவியை பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 18 பேர் கடந்த 7 மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. சரண் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியர், 15 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் ஆகியோர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக மாணவி புகார் அளித்தார். பீகார் மாநிலத்தில் சப்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 13 வயது மாணவி. இவரது தந்தை கடந்த ஆண்டு சிறைக்கு சென்றுவிட்டார். இதையடுத்து அந்த மாணவியை கடந்த டிசம்பர் மாதம் சகமாணவன் பிளாக்மெயில் செய்து பலாத்காரம் செய்தான். இதையடுத்து 4 மாணவர்கள் சேர்ந்து அந்த மாணவியை பலாத்காரம் செய்தனர்.இதைத் தொடர்ந்து இந்த பட்டியலில் பள்ளி தலைமை ஆசிரியரும் இரு ஆசிரியர்களும் இணைந்து கொண்டனர். இது போல் அந்த சிறுமியை பிளாக்மெயில் செய்து பலாத்காரம் செய்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்தது.

இதனிடையே சிறுமியின் தந்தை சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டார். இதைத் தொடர்ந்து அந்த மாணவி நேராக சப்ரா காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தார். இதனையடுத்து தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாணவி அளித்த புகாரின் பேரில் முதற்கட்டமாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.