Asianet News TamilAsianet News Tamil

மது விலக்கு எதிராெலி : பீஹாரில் சாலை விபத்துகள் 19% குறைந்தது!

bihar liquor-ban
Author
First Published Dec 23, 2016, 9:37 AM IST


மது விலக்கு அமல்படுத்தியதில் இருந்து  சாலையோர விபத்துகள் 19 சதவீதம் குறைந்துள்ளதாக பீஹார் முதலமைச்சர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

பீஹாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட பிறகு, ஏப்ரல் 1 முதல் நவம்பர் 30 வரையிலான 7 மாதங்களில் மட்டும் சாலையோர விபத்துகள் 19 சதவீதமாக குறைந்துள்ளதாகத் தெரிவித்தார். அதேபோல, விபத்துகளால் உயிரிழப்போரின் சதவீதமும் 31 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் 500 மீட்டா் தூரத்துக்கு மது விற்க தடை விதித்து தீா்ப்பளித்த உச்சநீதிமன்றத்துக்கு தனது பாராட்டை தொிவித்துக்காெள்வதாகவும் முதலமைமச்சர்  நிதீஷ் குமார் கூறினாா்.

முதலமைச்சராக பதவியேற்றபிறகு, மாநிலம் முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும், மதுவிலக்கை தடை செய்ய பீஹார் அரசு மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios