Asianet News TamilAsianet News Tamil

பிஹாரில் பூமிக்கு கீழ் 22 கோடி டன் தங்கம்: தோண்டி வெளியே எடுக்க நிதிஷ் அரசு முடிவு

Bihar decides to accord permission for exploration of countrys largest gold reserve  :பிஹாரில் உள்ள ஜம்மு மாவட்டத்தில் நாட்டிலேயே மிக பெரிய தங்கச் சுரங்கம் இருப்பதால் அங்கு தங்கத்தை தோண்டி எடுக்க அனுமதிக்க முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

Bihar decides to accord permission for exploration of countrys largest gold reserve in Jamui
Author
Patna, First Published May 28, 2022, 5:22 PM IST

பிஹாரில் உள்ள ஜம்மு மாவட்டத்தில் நாட்டிலேயே மிக பெரிய தங்கச் சுரங்கம் இருப்பதால் அங்கு தங்கத்தை தோண்டி எடுக்க அனுமதிக்க முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.

இந்திய தொல்லியல்துறை ஆய்வின்படி, ஜம்மு மாவட்டத்தில் மட்டும் 222.88 மில்லிடன் டன் தங்கம்(22 கோடி) இருப்பு பூமிக்குள் இருக்கிறது, இதில் 37.60 டன் உயர்ந்த தங்க தாது மண் இருக்கிறதுஎனத் தெரிவித்துள்ளது.

Bihar decides to accord permission for exploration of countrys largest gold reserve in Jamui

பிஹார் அரசின் கனிமவள கூடுதல் தலைமைச்செயலாளர் ஹர்ஜோத் கவுர் பாம்ரா கூறுகையில் “ இந்திய தொல்லியல்துறை, தேசிய தாது மேம்பாட்டு கழகம், ஆகியவற்றுடன் ஜம்மு மாவட்டத்தில் புதைந்திருக்கும் தங்கத்தை தோண்டு எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. தொல்லியல்துறை ஆய்வுக்குப்பின்புதான் ஆலோசனை நடக்கிறது. ஜம்முமாவட்டத்தில் கர்மாதியா, ஜாஜா, சோனோ ஆகிய இடங்களில் அதிகமாக தங்கம் கிடைக்க வாய்ப்புள்ளது.

தங்கத்தை வெட்டி எடுப்பது தொடர்பாக மத்திய கனிமவள அமைப்புகள், ஜி3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும். இதுதொடர்பாக மத்திய கனிமவளத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி மக்களவையில் கடந்த ஆண்டு தெளிவாகத் தெரிவித்துள்ளார்” எனத் தெரிவித்தார்

Bihar decides to accord permission for exploration of countrys largest gold reserve in Jamui

மக்களவையில் மத்திய கனிமவளத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறுகையில் “  நாட்டிலேயே அதிகமான தங்கம் கனிமவளம் பிஹாரில்தான் இருக்கிறது. பிஹாரில் மட்டும் 222.88 மில்லியன் டன் தங்கம் இருப்பு இருக்கிறது.நாட்டின் ஒட்டுமொத்த தங்க இருப்பில் 44 சதவீதம். தேசிய கனிமவளத்துரை ஆய்வில், 2015ம் ஆண்டு நிலவரப்படி முதன்மை தங்க தாது மண் மட்டும் 501.83 மில்லியன் டன் இருக்கிறது. இதில் 654டன் தங்கம் கிடைக்கும். பிஹாரில் மட்டும் 222.88 மில்லியன் தாது மண் இருக்கிறது, இதில் 37.60 டன்தங்கம் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்

Follow Us:
Download App:
  • android
  • ios