மகனின் உடலை பெற 50,000 ரூபாய் லஞ்சம் கேட்ட ஊழியர்.. பணம் இல்லாததால் வீடு வீடாக சென்று பிச்சை எடுத்த பெற்றோர்.!
பீகாரில் இறந்துபோன மகனின் உடலை எடுத்து செல்ல அரசு ஊழியர் 50,000 ரூபாய் லட்சம் கேட்டதால் இதை கொடுக்க முடியாத காரணத்தால் வயதான தம்பதியினர் லஞ்சம் கொடுக்க தெரு தெருவாக பிச்சை எடுத்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் சமஸ்டிபூரை சேர்ந்தவர் மகேஷ் தாக்குரின் மகன் கடந்த சில நாட்களுக்கு முன் காணாமல் போன நிலையில் அவரது சடலம் சர்தார் அரசு மருத்துவமனையில் இருப்பதாக பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுதத்து, மகனின் உடலை வாங்க பெற்றோர் மருத்துவமனைக்கு வந்தனர்.
ஆனால், அங்கிருந்த ஊழியர்கள் சடலத்தை வழங்க வேண்டும் என்றால் 50,000 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால், மகனின் சடலத்தை பெற வீடு வீடாக சென்று பிச்சை எடுத்தனர். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இதுகுறித்து விசாரணை நடத்தி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.