Gujarat CM Bhupendra Patel:குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 2 வது முறையாக பதவி ஏற்றார்! பிரதமர் மோடி வருகை

குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி பெற்ற பாஜக 7வதுமுறையாக ஆட்சி அமைத்துள்ளது. அந்த மாநிலத்தில் 2வது முறையாக முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்றார்.

Bhupendra Patel takes the oath of office as Gujarat's chief minister for the second time

குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி பெற்ற பாஜக 7வதுமுறையாக ஆட்சி அமைத்துள்ளது. அந்த மாநிலத்தில் 2வது முறையாக முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்றார்.

முதல்வர்  பூபேந்திர படேலுடன் சேர்ந்து 8 கேபினெட்அமைச்சர்கள் உள்பட 16அமைச்சர்கள் பதவிஏற்றனர். இதில் 11 பேர் புதியவர்கள். 

Bhupendra Patel takes the oath of office as Gujarat's chief minister for the second time

இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ஸ்மிருதி இரானி, ராம்தாஸ் அத்வாலே, சர்பானந்த சோனாவால் உள்ளிட்டோரும், பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும், எம்.பி.க்கள், பாஜக நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றனர்.

இது தவிர பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்களான உ.பி. முதல்வர் ஆதித்யநாத், அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் ஷர்மா, மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ஹரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார்,  உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கர்நாடக முதல்வர் சிஆர் பொம்மை, கோவா முதல்வர் பரிமோத் சாவந்த், அருணாச்சலப்பிரதேச முதல்வர் பீமா கண்டு, ஹரியானா துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா  ஆகியோர் பங்கேற்றனர்.

Bhupendra Patel takes the oath of office as Gujarat's chief minister for the second time

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ், எம்.பி.க்கள் உள்ளிட்டோரும், பிரச்சாரம் செய்த பாஜக நிர்வாகிகளும் விழாவில் பங்கேற்றனர். இதுதவிர 200 சாதுக்களும் பங்கேற்றனர்.

கேபினெட் அமைச்சர்களாக கனு தேசாய், ரிஷிகேஷ் படேல், ராகவ்ஜி படேல், பாலவந்த்சிங் ராஜ்புத், குன்வர்ஜ்  பவலியா, முலு பேரா, குபர் தின்தோர், பானுபென் பாபாரியா ஆகியோர் பதவி ஏற்றனர். ஹர்ஸ் சங்க்வி, ஜெக்தீஷ் விஸ்வர்மா ஆகியோர் தனித்துறை அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர். இது தவிர புருஷோத்தம் சோலங்கி, பச்சு காபத், முகேஷ் படேல், பிரபுல் பன்ஷேரியா, குவேர்ஜ் ஹல்பாத்தி, பிகுன்ஷிங் பார்மர் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios