இந்தியர்களை முட்டாள்கள் என்று கூறிய ஜெட் ஏர்வேஸ் விமானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் வலியுறுத்தி உள்ளார். 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த விமானி ஒருவரின் நிறவெறியை தனது தொடர்ச்சியான சீரியஸ் டூவிட்டுகளால் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். அந்த டூவிட்களில், "பெர்ன்ட் ஹோஸ்லின் என்ற அந்த விமானி இரண்டு பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டதோடு தாக்குதலும் நடத்தியுள்ளதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார். 

நம் நாட்டில் இதுபோன்ற சம்பவங்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் அந்த டூவிட்டில் ஹர்பஜன் பிரதமர் மோடியை வலியுறுத்தி உள்ளார். இந்த சம்பவத்தைப் பற்றி பூஜாவின் டூவிட்டர் பதவியில் கூறியிருப்பது"பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இருந்து மும்பைக்கு கடந்த 3 மாதம் தேதி ஜெட்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் பூஜா குஜ்ரால் என்ற பெண் மாற்றுத்திறனாளியான தனது நண்பர் ஒருவர் உடன் பயணித்துக் கொண்டிருந்தார். 

Strict action must b taken &such things should not be allowed or tolerated in r country.. #proudtobeindian let's get together and sort this

— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 26, 2017

மும்பையில் விமானம் தரையிறங்கியதும், சக்கர நாற்காலி பூஜாவின்  இருக்கைக்கு அருகே வர முடியவில்லை. இதனால் காலதாமதம் ஏற்பட்டதால் ஆவேசமடைந்த விமானி ஆக்ரோமாக கத்தியதோடு, அப்பெண்ணின் கையைப் பிடித்து வெளியேறுமாறு கத்தினார். மேலும் இந்தியர்களை முட்டாள்கள் என்றும் அந்த விமானி கத்தினார். இவ்வாறு பூஜாவின் டூவிட்டரில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Not only was he racist but physically assaulted a lady and abused a physically challenged man..absolutely disgraceful &shame on @jetairways

— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 26, 2017

So called this Bernd Hoesslin a pilot with @jetairways called my fellow indian(u bloody indian get out of my flight)while he is earning here

— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 26, 2017

இதற்கிடையே தனது சக இந்தியரை முட்டாள்கள் என்று கூறிய அந்த விமானி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஹர்பஜன்சிங் பிரதமர் மோடியை வலியுறுத்தி உள்ளார். நம் நாட்டிலேயே சம்பாதித்துக் கொண்டு இந்தியர்களை தரக்குறைவாக பேசியது மட்டும் அல்லாமல் அந்தப் பெண்ணையும் அவரது மாற்றுத் திறனாளி நண்பரையும் விமானி தாக்கியுள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஹர்பஜன் தனது டூவிட்டுகளில் குறிப்பிட்டுள்ளார்.