கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சரக்கு(ஹாட்) அடிக்கும் குடிமகன்கள் அதிகமான இருந்த கேரள மாநிலம், மெல்ல சரக்குக்கு பதிலாகபீருக்கு மாறிவருகிறது.
கடந்த 2014 ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டு வரை பீர் விற்பனை 55 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேசமயம், மதுவகைகள்(ஹாட்) விற்பனை 3 சதவீதம் சரிந்துள்ளது. மாநில அரசின் புதிய மதுக்கொள்கையின் படி, கடந்த ஆண்டு 400-க்கும் மேற்பட்ட மதுபார்கள் மூடிய போதிலும், மதுகுடிக்கும் விருப்பம் தணியவில்லை.
தகவல் பெறும் உரிமைச்சட்டம் மூலம்கடந்த சில ஆண்டுகளில் மாநிலத்தின் மதுவிற்பனை குறித்து ஒரு நாளேடு சார்பில் தகவல் கோரப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது,
மாநில அரசு மதுவிற்பனையை படிப்படியாக குறைத்து பூரண மதுவிலக்கு கொண்டு வர திட்டமிட்டு அதற்கான கொள்கைகளை வகுத்தபோதிலும், மதுவிற்பனை குறையவில்லை. மாறாக, பீர் விற்பனை 3 மடங்கு அதிகரித்துள்ளது. காரணம், பீரில் ஆல்கஹால் கலப்பு அதிகம் இருப்பதால் அதை விரும்புகின்றனர்.
மதுகிடைப்பதும், வாங்குவதும் கடினமாகிவிட்ட நிலையில், ஸ்ட்ராங் பீரில் ஆல்கஹால் கலப்பு அதிகம் இருப்பதால் இப்போது கேரளமாநிலத்தில் அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்துக்கு மாறிவிட்டனர். அதுமட்டுமல்லாமல், ஒரு சிலர் காக்டெயில் பீர் என்று ஒயினுடன் பீர்கலந்து குடித்து உச்சகட்ட போதைக்கும் சென்றுவிடுகின்றனர்.
இது குறித்து கேரள மாநில மதுவிற்பனை கழகத்தின் மேலாளர் எச் வெங்கடேஷ் கூறுகையில், மாநிலத்தின் பீர் விற்பனை கடந்த ஓர் ஆண்டில் மட்டும், 55 மடங்கு அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், கடந்த இரு ஆண்டுகளில் மதுவிற்பனை 22 சதவீதம் உயர்ந்துள்ளது. 2013-14ம் ஆண்டு ரூ. 9 ஆயிரம் கோடியில் இருந்து 2014-15ம் ஆண்டில் ரூ.11 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டு பீர் விற்பனை ரூ. 512 கோடியாக இருந்த நிலையில், 2014-ம் ஆண்டு ரூ. 795 கோடியாக உயர்ந்துள்ளது. மக்களை குடிப்பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்கவே புதிய மதுக்கொள்கையை அரசு வகுத்து, வரியையும், விலையையும் அதிகரித்தது. ஆனால், இதற்கு எதிர்மாறாக, விற்பனை அதிகரித்துள்ளது என்று தெரிவித்தார்.
