Banking service fees is going to increase due to GST
நாடுமுழுவதும் அமலுக்கு வந்த சரக்கு மற்றும் சேவை வரியால்(ஜி.எஸ்.டி.) வங்கிசேவை, நிதிச்சேவை, இன்சூரன்ஸ் கட்டணம், கிரெடிட் கார்டு கட்டணம் ஆகியவை இனி அதிகரிக்கும்.
ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வருவதற்கு முன், வங்கிச்சேவை, இன்சூரன்ஸ் பிரியம் உள்ளிட்டவற்றுக்கு சேவை வரியாக 15 சதவீதம் மட்டுமே வரி விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால், ஜி.எஸ்.டி.யில் இந்த வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் வழக்கத்தைக் காட்டிலும் 3 சதவீதம் அதிகமாக வரியை செலுத்த வேண்டியது இருக்கும்.
இந்த வரி உயர்வு தொடர்பாக ஜூன் 30-ந்தேதியே வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்ளுக்கு சேவை வரி கட்டணம் உயர்வது குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் அறிவித்து விட்டன.
வங்கிச்சேவையைப் பொருத்தவரை, ஏ.டி.எம்.களில் கட்டணமின்றி பணம் எடுக்கும் முறைக்கு மேல் அதிகமாக எடுத்தால் 18சதவீதம் சேவை வரி செலுத்த வேண்டும்.
மேலும், பணம் அனுப்புதல், டெபிட் கார்டு, கிரெட் கார்டுக்கான சேவை, வீட்டுக்கடன் செயல்பாட்டுக்கட்டணம், வங்கி லாக்கருக்கான கட்டணம், காசோலை, வரைவோலை, பாஸ்புக் பிரதி ஆகியவை பெறுவதற்கான கட்டணம், பில் கட்டணம், ‘செக் கலெக் ஷனில்’ போடுதல், பணம் கையாளும் கட்டணம், எம்.எம்.எஸ். அலர்ட் ஆகிவற்றுக்கும் கட்டணம் அதிகரிக்கும்.
கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.களில் மாதத்திற்கு 5 முறைக்கும் கூடுதலாகவோ அல்லது மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் மாதத்திற்கு 3 முறைக்கும் கூடுதலாகவோ சேவை பெற்றால் ஒவ்வொரு முறைக்கும் 18 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும்.
இன்சூரன்ஸ் பிரியமத்துக்கு இதுவரை 15 சதவீதம் சேவை வரி செலுத்திய நிலையில், இனி 18 சதவீதம் செலுத்த வேண்டும்.
