Asianet News TamilAsianet News Tamil

அம்மாடியோவ்... இதுவரை வங்கியில் ரூ.5.44 லட்சம் கோடி டெபாசிட்

bank deposit
Author
First Published Nov 21, 2016, 6:09 PM IST


மத்திய அரசு ரூபாய் நோட்டு தடை அறிவிப்புக்குபின், கடந்த 18-ந்தேதி வரை வங்கியில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளாக ரூ.5.44 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டில் கருப்பு பணம் மற்றும் கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி ரூ.500, ரூ1000 நோட்டுகளை தடைசெய்து கடந்த 8-ந்தேதி அறிவித்தார். அதன்பின், மக்கள் தங்களிடம் இருக்கும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள், தபால்நிலையங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ கடந்த 10-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை மக்கள் தங்களின் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றியும், டெபாசிட் செய்தும் வருகின்றனர். அந்த வகையில் இதுவரை வங்கிகளில் ரூ. 5 லட்சத்து 44 ஆயிரத்து 571  கோடிக்கு டெபாசிட் வந்துள்ளது. இதில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிய வகையில் ரூ. 33 ஆயிரத்து 6 கோடியும்,டெபாசிட்களாக ரூ. 5 லட்சத்து 11 ஆயிரத்து 565 கோடி வரப்பெற்றுள்ளது.

மேலும், இந்த 9 நாட்கள் இடை வௌியில் மக்கள் ஏ.டி.எம். மற்றும் வங்கிகளில் இருந்து ரூ. ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 316 கோடி பெற்றுள்ளனர்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios