மம்தா பானர்ஜி ட்விட்டரில் வங்கதேசம் பற்றி வெளியிட்ட பதிவு தங்களைச் சீண்டும் வகையில் இருப்பதாகவும், வங்கதேசத்தின் உள்விவகாரங்கள் தொடர்பான தவறான கருத்துகளை அவர் கூறியிருப்பதாகவும் வங்கதேச அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக ஏற்பட்ட கலவரம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறிய கருத்துக்கு வங்கதேச அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ட்விட்டரில் வங்கதேசம் பற்றி வெளியிட்ட பதிவு தங்களைச் சீண்டும் வகையில் இருப்பதாகவும், வங்கதேசத்தின் உள்விவகாரங்கள் தொடர்பான தவறான கருத்துகளை அவர் கூறியிருப்பதாகவும் அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

Scroll to load tweet…

மேலும், நாட்டில் இயல்பு நிலையைக் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், மேற்கு வங்க முதலமைச்சரின் இத்தகைய கருத்துக்கள், குறிப்பாக மாணவர்களின் மரணம் பற்றிய கருத்துகள், மக்களை தவறாக வழிநடத்துவதாக உள்ளது என்றும் வங்கதேச அரசு தெரிவித்தது.

மம்தா பானர்ஜி ட்விட்டர் பதிவில் கூறியிருப்பது போன்ற நிலை வங்காளதேசத்தில் இல்லை என்றும் அந்நாட்டு அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும், வங்கேதசம் மக்களுக்கு உதவி தேவைப்படும்போது அடைக்கலம் கொடுக்க உத்தரவாதம் அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த வகையான கருத்துகள் பயங்கரவாதிகள் மற்றும் குற்றவாளிகள் நிலைமையைத் தவறாக பயன்படுத்திக்கொள்ளத் தூண்டலாம் என்றும் வங்கதேச அரசு கூறியுள்ளது.