Asianet News TamilAsianet News Tamil

யாருடா நீங்க எல்லாம்… சொகுசு பங்களவில் நவீன தொழில்நுட்பத்துடன் கஞ்சா சாகுபடி செய்த மாணவர்கள்...!

சர்வதேச அளவில் ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை இந்த மாணவர் கும்பல் பயன்படுத்தி கஞ்சா செடிகளை பல ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளது.

bangalore students cultivate cannabin in house
Author
Bangalore, First Published Sep 28, 2021, 6:38 PM IST

சர்வதேச அளவில் ஆய்வுக்கூடங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை இந்த மாணவர் கும்பல் பயன்படுத்தி கஞ்சா செடிகளை பல ஆண்டுகளாக வளர்த்து வந்துள்ளது.

படிக்ப்புக்காக வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்த கும்பல் விசா காலம் நிறைவடைந்த பின்னர் சட்டவிரோதமாக தங்கி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் பிடதி பகுதியில் சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து அதில் அதி நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கஞ்சா சாகுபடி நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விளைவிக்கப்படும் கஞ்சா செடிகள் வெளிச்சந்தையில் பல லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் ஆவதாகவும் கிடைத்த தகவலில் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அதிரடி ஆய்வை மேற்கொண்டனர். அப்போது எல்.இ.டி. பல்புகளை கொண்டு சொகுசு பங்களாவில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதைக் கண்ட போலீஸ் அதிகாரிகள் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

bangalore students cultivate cannabin in house

கஞ்சா செடிகளை வளர்த்த ஈரான் நாட்டை சேர்ந்த ஜாவித் ருஸ்தம், ஆதார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஈரானில் இருந்து கல்வி விசாவில் பெங்களூரு வந்த இருவரும் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியிருந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கும்பல் வெளிநாடுகளில் இருந்து கஞ்சா விதைகளை வாங்கி வீட்டிலேயே உயர்தர கஞ்சா செடிகளை பல வருடங்களாக வளர்த்து வந்துள்ளனர். இவர்கள் சாகுபடி செய்த கஞ்சா இலைகள் ஒரு கிராம் ரூ.5,000-க்கும் அதிகமாக விற்பனையாகி வருகிறது.

bangalore students cultivate cannabin in house

கஞ்சா செடி வளர்வதற்கு தேவையான வெப்பநிலையை லேசார் மற்றும் ரசாயனங்களைக் கொண்டு வீட்டிற்குள்ளேயே இந்தக் கும்பல் உருவாக்கியுள்ளனர். பல வருடங்களாக இந்த தொழில் மூலம் நால்வரும் பல லட்சங்கள் வரை சம்பாதித்தது சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததையும் போலீஸார் உறுதி செய்துள்ளனர். பெங்களூருவை உலுக்கியுள்ள இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios