ஆண்களும், பெண்களும் கோவிலுக்கு என்ன உடை அணிந்து வரவேண்டும் என சில விதிமுறைகளை இந்து மதம் வரையறுத்துள்ளது. ஆனால் அண்மைக்காலமாக இந்த விதிமுறைகள் மீறப்பட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் அருள்மிகு பத்மநாபசுவாமி கோவிலுக்குள் பெண்கள் சல்வார், சுடிதார் போன்ற உடைகளை அணிந்து வரக்கூடாது என கோவில் நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த்து. அப்போது கோவில் என்பது என்பது புனிதமான இடம் என்றும், அங்கு ஆடைக்கட்டுப்பாடு அவசியம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து பத்மநாபசுவாமி கோவிலுக்குள் பெண்கள் சல்வார் மற்றும் சுடிதார் போன்ற உடைகள் அணிந்து வர நீதிபதிகள் தடைவிதித்த்னர்.

ஏற்கனவே சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல கோவில் நிர்வாகம் தடைவிதித்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கோவிலுக்குள் பெண்கள் செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என கேரள அரசு அறிவித்திருப்பத்ற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்த்த்தகது.