Asianet News TamilAsianet News Tamil

ரூ.6 லட்சம் விலை போன ‘ஷாரூக்கான்’ ஆடு!

பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பெயர் கொண்ட ஆடு பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ.6 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது

Bakra Eid 2023 Shah Rukh Khan Named Goat sold by 6 lakhs
Author
First Published Jun 30, 2023, 10:51 AM IST

இஸ்லாமியர்களின் முக்கிய புனித பண்டிகைகளில் ஒன்றான ஈகை திருநாளாம் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் நேற்று கொண்டாடப்பட்டது. இப்ராகிம் நபி, இஸ்மாயில் நபி ஆகியோரின் தியாகத்தை போற்றும் வகையில் தியாகத்திருநாளாக பக்ரீத் பண்டிகை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். அண்டை வீட்டாருடன் நல்லுறவை பாராட்ட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

பக்ரீத் பண்டிகையயொட்டி, ஆடுகளை பலியிட்டு, அதனை சமைத்து உற்றார், உறவினர், நண்பர்கள், இல்லாதவர்களுக்கு கொடுத்து முஸ்லிம்கள் கொண்டாடினர். இதனால், சந்தையில் ஆடுகளின் விற்பனை அதிகரித்தது. சில சிறப்புமிக்க ஆடுகள் லட்சக்கணக்கில் விலை போனது. அந்த வகையில், பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பெயர் கொண்ட ஆடு பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ.6 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது.

2024 தேர்தல் வியூகத்தை இறுதி செய்யும் பாஜக: தமிழ்நாட்டை கவர் செய்ய மெகா திட்டம்!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சந்தையில் ஆடுகள், மாடுகள் விற்பனை படுஜோராக நடந்தது. அந்த சந்தையில் மட்டும் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான ஆடு, மாடுகள் விற்பனையானதாக தெரிகிறது. குறிப்பாக, பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் பெயர் கொண்ட அஜ்மீரி இன ஆடு ஒன்று ரூ.6 லட்சத்துக்கு விற்பனையாகியுள்ளது. அந்த ஆட்டின் உரிமையாளர் இர்ஃபான், தான் வளர்க்கும் ஆடுகளுக்கு பாலிவுட் நடிகர்களின் பெயர்களை சூட்டி வளர்த்து வருவதாக தெரிவித்துள்ளார். அதேபோல், ஷாரூக்கான் பெயர் கொண்ட மற்றொரு ஆடு ரூ.2.15 லட்சத்துக்க்கு விற்பனையாகியுள்ளது.

முன்னதாக, முஸ்லிம் சமுதாயத்திற்கு மங்களகரமானதாகக் கருதப்படும் 786 என்ற எண் கொண்ட ஆடு ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் ரூ.1கோடி வரை விலை போனது. ஆனால், அந்த ஆட்டினை விற்க அதன் உரிமையாளர் மறுப்பு தெரிவித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios