சோல் மீம்ஸ் எனும் டுவிட்டர் கணக்கு ஒன்றில், அதிபர் டிரம்ப் போரில் வாளேந்தி சண்டையிடும் காட்சிகள் கொண்ட மார்பிங் செய்யப்பட்ட பாகுபலி பட வீடியோ வெளியானது.  இந்த வீடியோ பதிவை டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் மீண்டும் ரீ-டுவீட் செய்துள்ளார்.  அதில், இந்தியாவில் உள்ள எனது சிறந்த நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது குறித்து எதிர்நோக்கி இருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

பாகுபலி படத்தில் வரும் காட்சியில் தனது முகத்தை மார்பிங் செய்து பதிவிடப்பட்ட வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு ரிட்வீட் செய்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வருகிற 24-ம் தேதி 2 நாள் சுற்றுபயணமாக இந்தியாவுக்கு வருகை தருகிறார். டிரம்புடன் அவரது மனைவி மெலனியா டிரம்பும் வருகிறார். அவர் செல்லவிருக்கும் நகரங்கள் அனைத்தும் டிரம்பை வரவேற்கும் விதமாக விழாக்கோலம் பூண்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க டிரம்பிற்கு வழங்க பல்வேறு தரப்பினரும் பரிசுப் பொருட்களை அனுப்பியும் வருகின்றனர். இவரது வருகையையொட்டி 10,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சமூக வளைதலங்களில் பிரத்யேக வீடியோக்கள் மூலம் டிரம்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், சோல் மீம்ஸ் எனும் டுவிட்டர் கணக்கு ஒன்றில், அதிபர் டிரம்ப் போரில் வாளேந்தி சண்டையிடும் காட்சிகள் கொண்ட மார்பிங் செய்யப்பட்ட பாகுபலி பட வீடியோ வெளியானது. இந்த வீடியோ பதிவை டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் மீண்டும் ரீ-டுவீட் செய்துள்ளார். அதில், இந்தியாவில் உள்ள எனது சிறந்த நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது குறித்து எதிர்நோக்கி இருக்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

Scroll to load tweet…

அந்த வீடியோவில், டிரம்ப், கையில் வாளுடன் போரிடுவது போன்றும், ரதம் ஒன்றில் பயணிப்பது போலவும் காட்சிகள் மார்பிங் செய்யப்பட்டு உள்ளன. பின்னணியில் ஜியோ ரே பாகுபலி என்ற பாடலும் இசைக்கப்படுகிறது. இதனுடன், படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஏற்றிருந்த சிவகாமி வேடத்தில், அவருக்கு பதிலாக டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் வருவது போலவும் வீடியோவில் உள்ளது.