பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவிற்கு துணை மாவட்ட ஆட்சியர் பதவியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வழங்கியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவிற்கான பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மேலும், குரூப்-1 பிரிவின் அதிகாரி பதவியொன்றையும் பி.வி. சிந்துவிற்கு வழங்குவதாக ஆந்திர அரசு அறிவித்தது. அதன்படி பி.வி.சிந்துவிற்கு துணை மாவட்ட ஆட்சியர் பதவியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வழங்கியுள்ளார்.
