baby birth look like mermaid
மகாராஷ்டிரா மாநிலத்தில், கடற்கன்னியை போன்று, கால்கள் ஒட்டிய நிலையில் உடல் அமைப்புக் கொண்ட குழந்தை பிறந்து, ஒரு சில நிமிடங்களில் இறந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், பீட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், திக்ஷா கம்பல் என்ற பெண்ணுக்கு குழந்தைப் பிறந்துள்ளது. இந்த குழந்தையில் உடலமைப்பு கடற்கன்னியை போன்று இருந்துள்ளது.
ஆனால் அந்த குழந்தை பிறந்த சில நிமிடத்தில் இறந்து விட்டது. 1 கிலோ, 800 கிராம் எடையுடன் பிறந்த அந்த குழந்தையின் கால்கள் இரண்டும் ஒட்டியவாறும், கைகள் இரண்டும் மீன்களில் துடுப்புகள் போன்று இருந்தது பார்பவர்களை ஆச்சர்யப்படுத்தியது.
இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், அரிதான உடல் வளர்ச்சி குறைபாடு காரணமாக இதுபோன்ற உடலமைப்புடன் இக்குழந்தை பிறந்துள்ளது என்றும், சிரேனோமெலியா நோய் தாக்கப்பட்டு பிறந்த அந்த குழந்தையின் உடல் மேல்பகுதி மனிதர்களை போலவும், கீழ்பகுதி மீனின் உடலமைப்பு போலவும் மனிதர்களை போலவும் கீழ்பாதி மீனின் உடலமைப்பு போலவும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்
