அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருதரப்பினரும் வழிபாடு நடத்தி உள்ளதாக கூறியிருக்கும் நீதிபதிகள் கோயிலை இடித்து தான் மசூதி கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரம் தொல்லியல்துறையிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். காலி இடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை எனவும் சர்ச்சைக்குரிய நிலம் இஸ்லாமியருக்கு சொந்தம் என்று நிரூபிக்கவில்லை என கூறியிருக்கின்றனர்.

 

மேலும் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருதரப்பினரும் வழிபாடு நடத்தி உள்ளதாக கூறியிருக்கும் நீதிபதிகள், ராமர் கட்ட தடையில்லை என்று தெரிவித்துள்ளனர். இஸ்லாமியருக்கு மாற்று நிலம் வழங்க வேண்டும் எனவும் அங்கிருந்த கட்டடம் இஸ்லாமிய முறைப்படி கட்டப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 12 நூற்றாண்டில் அங்கு கோவில் இருந்ததாகவும் ஒரு மத நம்பிக்கையை மற்ற மதத்தினர் தடுக்க கூடாது என்றும் நீதிபதிகள் கூறியிருக்கின்றனர்.