உத்தரபிரதேச மாநிலத்தில் அமைத்திருக்கும் அயோத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது குறித்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என்று நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. பரபரப்பான இந்த வழக்கில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று காலை 10.30 தீர்ப்பை வழங்க தொடங்கி இருக்கின்றனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பை தற்போது வாசித்து வருகின்றனர். 5000 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு தயாரிக்க பட்டிருப்பதாக தகவல் வருகிறது. இது சுமார் அரை மணி நேரம் ஆகும் என்று தெரிகிறது.  தீர்ப்பில் ஒரு மத நம்பிக்கையை இனொரு மதத்தினர் தடுக்க கூடாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே தீர்ப்பு வெளியாகி வருவதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. அயோத்தி அமைந்திருக்கும் உத்தரபிரதேச மாநிலத்திலும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.