கேரள முதல்வரின் டிவி நிகழ்ச்சி தயாரிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள பெண் ஊழியரை நிகழ்ச்சி தயாரிப்பாளர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது   பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள தகவல் தொழில்நுட்பத் துறை ‘‘நாம் முன்னோட்டு’’ என்ற டிவி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் கேரள முதல்வர் பினராய் விஜயன் பொதுமக்களுக்கான சந்தேகங்களுக்கு பதில் அளித்து வருகிறார்.

இந்நிகழ்ச்சியை  வாரா வாரம் சுமார் 30 நிமிடம் தூர்தர்ஷன் உள்பட பெரும்பாலான மலையாள தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக சப்னேஷ் என்பவர். இந்த நிகழ்ச்சி தயாரிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள ஒரு பெண் ஊழியரை சப்னேஷ் கடந்த 6 மாதத்திற்கு முன் தனது வீட்டிற்கு வரவழைத்து  பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக கூறப்படுகிறது. அனால் அந்த பெண்ணோ அந்த தயாரிப்பளருக்கு பயந்து  இதுபற்றி யாரிடமும் புகார் கொடுக்கவில்லை.

இந்நிலையில், சப்னேஷ் மீண்டும் அவருக்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து தகவல் தொழில்நுட்பத்துறை இயக்குநரை சந்தித்த பெண் ஊழியர், இது குறித்து முதல்வரிடம் புகார் செய்யப் போவதாக கூறினார்.

இதனைத்தொடர்ந்து, கேரள அரசின் ‘‘நாம் முன்னோட்டு’’ தொலைக்காட்சி  நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் பொறுப்பில் இருந்து சப்னேஷ் நீக்கப்பட்டுள்ளார்.