காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தின் மத்ரீகம் என்ற இடத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.
ஆனால் அங்கு தீவிரவாதிகள் இல்லாததால், சோதனையை முடித்துக் கொண்டு, நள்ளிரவு வாகனங்களில் முகாமுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் ராணுவ வாகனங்கள் திரும்பிக் கொண்ரருந்த போது 2.30 மணியளவில் அங்கு பதுங்கி இருந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். ராணுவ வாகனங்கள் மீது சரமாரியாக குண்டுகளை வீசியும், எந்திர துப்பாக்கியால் சுட்டும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து இரு தரப்பினருக்கும் கடும் சண்டை நடைபெற்றது. இதில் சம்பவ இடத்திலேயே 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 5 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். அவர்களை கைது செய்ய மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
