மும்பையில் இளம்பெண் ஒருவர் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.

மும்பையை சேர்ந்தவர் பஞ்சாபி. 25 வயதாகும் இவர் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கவேண்டும் என தொடர் முயற்சியில் இருந்து வந்துள்ளார். தற்போது பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வீடியோ எடிட்டராக பணிபுரிந்து வரும் இவர் சினிமாவில் நடிக்கும் ஆசை உடன் இருந்துள்ளார். இருந்தாலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் மனதளவில் பெரிதளவில் பாதிக்கப்பட்ட அவர் மன நல சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.

இதற்கிடையில் ஒருகட்டத்தில் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகி வியாழக்கிழமை இரவு 12 மணி அளவில் தான் தங்கியிருந்த கட்டிடத்தின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியான பஞ்சாபியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விசாரணையில் இதற்கு முன்னதாக மன அழுத்தத்தில் ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார் பஞ்சாபி என்பது குறிப்பிடத்தக்கது.